உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை முந்தும் இந்தியா: ஐநா

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. 142.86 கோடி மக்களுடன், சீனாவை பின்னுக்கு தள்ளியுள்ளது இந்தியா.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 19, 2023, 04:19 PM IST
  • இந்தியாவின் மக்கள்தொகை 165 கோடியாக உயரும்.
  • முப்பது ஆண்டுகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும்.
  • இந்தியாவின் மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

Trending Photos

ஐ.நா வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் இந்தியா மக்கள் திகையில் சீனாவை பின்னுக்கு தள்ளியுள்ளதாக கூறுகிறது. 142.86 கோடி மக்கள் தொகையுடன், சீனாவை பின்னுக்கு தள்ளி, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. சீனாவின் மக்கள் தொகை தற்போது 142.57 கோடி. இதன்மூலம் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக  சீனா உள்ளதாக ஐநா உலக மக்கள்தொகை தரவுகள் கூறுகிறது.

புதிய UNFPA அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் 0-14 வயதுக்குட்பட்டவர்கள், 18 சதவீதம் பேர் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள், 26 சதவீதம் பேர் 10 முதல் 24 வயது வயதுக்குட்பட்டவர்கள்,  15 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள் 68 சதவீதம், 65 வயதுக்கு மேல் 7 சதவீதம்.

பல்வேறு ஏஜென்சிகளின் மதிப்பீடுகள், இந்தியாவின் மக்கள்தொகை 165 கோடியாக உயரும் என்றும் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் முதியோர் எண்ணிக்கையும், பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் இளம் வயதினர் அதிகம் உள்ளனர் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) இந்தியாவின் பிரதிநிதியும், பூட்டானுக்கான நாட்டின் இயக்குநருமான ஆண்ட்ரியா வோஜ்னர், "இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள் 1.4 பில்லியன் வாய்ப்புகளாகப் பார்க்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

மேலும் படிக்க | சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்... UAE, சவுதி அரசுகளுடன் வெளியுறவுத் துறை ஆலோசனை!

"மிகப்பெரிய இளைஞர் கூட்டமைப்பைக் கொண்ட நாடு -- அதன் 254 மில்லியன் இளைஞர்கள் (15-24 ஆண்டுகள்) -- புதுமை, புதிய சிந்தனை மற்றும் நீடித்த தீர்வுகளுக்கான ஆதாரமாக இருக்க முடியும். "பெண்கள் இந்தப் பாதையில் முன்னேற முடியும். சமமான கல்வி மற்றும் திறன் வளர்ப்பு வாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான அணுகல் மற்றும் மிக முக்கியமாக அவர்களின் இனப்பெருக்க உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான தகவல் மற்றும் சக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது," என்று அவர் கூறினார்.

பாலின சமத்துவத்தை உறுதி செய்தல், அதிகாரமளித்தல் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான அதிகாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை நிலையான எதிர்காலத்திற்கான முக்கிய தீர்மானங்களாகும் என்று வோஜ்னர் கூறினார். தனிப்பட்ட உரிமைகள் மற்றும் விருப்பங்கள் மதிக்கப்பட வேண்டும், எப்போது குழந்தைகளைப் பெற வேண்டும். எத்தனை குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதை அனைவரும் தன் விருப்பப்படி தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

"பெண்கள் மற்றும் சிறுமிகள் நலன்கள், பாலியல் மற்றும் இனப்பெருக்க கொள்கைகள் மற்றும் திட்டங்களின் மையமாக இருக்க வேண்டும். உரிமைகள், தேர்வுகள் மற்றும் அனைத்து மக்களின் சம மதிப்பும் உண்மையாக மதிக்கப்படும் தான், எல்லையற்ற சாத்தியக்கூறுகளை கொண்ட எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும்," என ஐ.நா அதிகாரி மேலும் கூறினார்.

மேலும் படிக்க | CAPF தேர்வை தொடர்ந்து SSC தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்: மத்திய அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories