கேகேஆர் அணியில் ஜேசன் ராய்!
ஜேசன் ராயின் வருகை கேகேஆர் அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ESPNcricinfo staff
05-Apr-2023 • 6 hrs ago
ஜேசன் ராய் • Gareth Copley/Getty Images
ஸ்ரேயஸ் ஐயர், ஷகிப் அல் ஹசன் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து அவர்களுக்கான மாற்று வீரராக இங்கிலாந்து பேட்டர் ஜேசன் ராய் கேகேஆர் அணியில் இணைந்துள்ளார். ஜேசன் ராயின் அடிப்படை விலை ரூ. 1.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது கேகேஆர் நிர்வாகம் அவரை ரூ. 2.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
2022 ஐபிஎல் போட்டியில் ஜேசன் ராய் குஜராத் லயன்ஸ் அணிக்குத் தேர்வானார். ஆனால் போட்டி ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்பு விலகுவதாக அறிவித்தார். கேகேஆர் அணி 2023 ஐபிஎல் போட்டியில் ஓர் ஆட்டத்தில் மட்டும் விளையாடியுள்ளது. மொஹலியில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிஎல்எஸ் முறையில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி வரும் வியாழன் அன்று ஈடன் கார்டன் மைதானத்தில் ஆர்சிபி அணியுடன் மோதுகிறது.
முன்னதாக வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார். இரண்டாம் பாதியில் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயரும் சமீபத்தில் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். முதல் ஆட்டத்தில் கேகேஆர் அணியின் முன்கள பேட்டர்கள் சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில் ஜேசன் ராயின் வருகை அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.