ஆட்டங்கள் (5)
ஐபிஎல் 2023 (4)
BAN v IRE (1)
செய்திகள்

டி20 கிரிக்கெட்டின் புதிய நெ.1 பந்துவீச்சாளர்

டி20 தரவரிசையில் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் இலங்கையின் ஹசரங்காவைப் பின்னுக்குத் தள்ளி ரஷித் கான் முதலிடம் பிடித்துள்ளார்.

ESPNcricinfo staff
30-Mar-2023 • 3 hrs ago
Rashid Khan came up trumps  •  Getty Images

Rashid Khan came up trumps  •  Getty Images

டி20 கிரிக்கெட்டின் புதிய நெ.1 பந்துவீச்சாளராக ரஷித் கான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட டி20 தரவரிசையில் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் இலங்கையின் ஹசரங்காவைப் பின்னுக்குத் தள்ளி ரஷித் கான் முதலிடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்று சாதனை படைத்தது ஆப்கானிஸ்தான் அணி. 3 ஆட்டங்களில் 3 விக்கெட்டுகள் எடுத்தார் ரஷித் கான். கடந்த நவம்பர் மாதம் டி20 தரவரிசையில் நெ.1 இடத்தைப் பிடித்தார் ரஷித் கான். அதற்குப் பிறகு தற்போது முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரரான ஃபஸல்ஹக் ஃபரூக்கி, தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ளார். அவர் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதேபோல டாப் 10-ல் உள்ள மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர், முஜீப் உர் ரஹ்மான். தரவரிசையில் 8-ம் இடத்தில் உள்ளார். ரஷித் கான், ஃபஸல்ஹக் ஃபரூக்கி, முஜீப் உர் ரஹ்மான் என மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்கள், டி20 தரவரிசையின் டாப் 10 பட்டியலில் உள்ளார்கள்.
ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியில் உள்ளார் ரஷித் கான்.