புளியந்தோப்பு கே.பி. பார்க் குடியிருப்பு கட்டடத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு நேரில் ஆய்வு..!!

2021-08-18@ 16:32:09

சென்னை: புளியந்தோப்பு கே.பி. பார்க் குடியிருப்பு கட்டடத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். புளியந்தோப்பு கே.பி. பார்க் குடியிருப்பில் தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடத்தின் தூண்கள், சுவர் மோசமான நிலையில் இருப்பது பற்றி செய்தி வெளியானது. இதன் தொடர்பாக ஐஐடி குழு அமைக்கப்பட்ட நிலையில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.