சில்லி பாயின்ட்...

2021-08-17@ 00:05:53

* மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டித் தொடர் டோக்கியோவில் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால், ஸ்டேடியங்களில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஏடிபி டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் தொடர்ந்து 334வது வாரமாக நம்பர் 1 அந்தஸ்தை தக்க வைத்துள்ளார்.
* இலங்கை கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் குசால் பெரேராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.
* ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு குழப்பம் நிலவினாலும், தங்கள் அணி ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் நிச்சயம் பங்கேற்கும் என மீடியா மேலாளர் ஹிக்மத் ஹசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் முழங்கால் மூட்டு காயத்துக்காக மீண்டும் அறுவைசிகிச்சை செய்துகொள்ள உள்ளதால், அவர் களமிறங்க பல மாதங்களாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:

Roulette point சில்லி பாயின்ட்