இஎஸ்ஐ மருத்துவமனையில் தேவையான மருந்துகள் இருப்பு இல்லை: நிரந்தர மருந்தாளுநர்களும் இல்லை என பயனாளிகள் குற்றச்சாட்டு

2021-08-16@ 15:25:53

சென்னை: சென்னை சூளையில் செயல்படும் இஎஸ்ஐ மருத்துவமனையில் தேவையான மருந்துகள் இருப்பும் இல்லை. நிரந்தர மருந்தாளுநர்களும் இல்லை என பயனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மருந்து வாங்கும் கவுண்டர் அருகே 'களம் எங்களுக்கு கவலை ஏன் உங்களுக்கு...' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தும் தேவையான மருந்துகள் இருப்பு இல்லாததால் நோயாளிகள் பலமுறை மருத்துவமனைக்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளதாக பயனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பணி நேரத்திற்கு முன்பாகவே மருத்துவமனையை ஊழியர்கள் மூடி விடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சில அரசு மருத்துவர்கள் கையாளும்விதம் அதிர்ச்சி அளிப்பதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் மீதுதான் அதிகப்படியான புகார்கள் எழுந்துள்ளன.

Tags:

இஎஸ்ஐ