Income Tax Return: வருமான வரி தாக்கல் செய்கையில் ஏற்படும் பொதுவான தவறுகள்..!!

2020-21 நிதியாண்டின், ITR  தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 16, 2021, 05:08 PM IST
  • ITR எந்த தவறும் இல்லாமல் கவனமாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  • இல்லையெனில் அது எதிர்காலத்தில் சிக்கல்களை உருவாக்கும்.
  • 2020-21 நிதியாண்டின், ITR தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Trending Photos

Income Tax Return (ITR): ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்ய, பெரும்பாலான மக்கள் பொதுவான தவறுகளை செய்து சிரமப்படுகிறார்கள். ITR எந்த தவறும் இல்லாமல் கவனமாக தாக்கல் செய்யப்பட வேண்டும் இல்லையெனில் அது எதிர்காலத்தில் சிக்கல்களை உருவாக்கும். 2020-21 நிதியாண்டின், ITR  தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் மற்றும் எந்த தவறும் இல்லாமல் வருமான வரி  (Income Tax) தாக்கல் முறையாக செய்யப்பட்டால், அது அல்லா வகையிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நீங்கள் அதை தாக்கல் செய்வதற்கு முன், நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த சில டிப்ஸ்கள் இங்கே உள்ளன.

ALSO READ | Income Tax Refund: வருமான வரி ரீபண்ட் நிலையை அறிந்து கொள்வது எப்படி..!!

மதிப்பீட்டு ஆண்டின் விவரங்கள்:

வருமான வரி தாக்கல் செய்யும் போது ஒருவர் மதிப்பீட்டு ஆண்டையும் படிவத்தில் சரியாக குறிப்பிட வேண்டும் ஆனால் பலர் இதை தவறாக குறிப்பிடுகிறார்கள். இப்போது, ​​2020-21 நிதியாண்டுக்கு சரியான மதிப்பீட்டு ஆண்டு 2021-22 ஆக இருக்க வேண்டும். ஒருவர் தவறான ஆண்டை குறிப்பிட்டால் அது இரட்டை வரிவிதிப்பு மற்றும் அபராதங்கள் விதிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.

ALSO READ | Dangerous Apps: உங்க போனில் இந்த ‘9’ செயலிகளை உடனே நீக்கவும்

 

சரியான படிவத்தைத் தேர்ந்தெடுப்பது:

பணியாளர், முதலாளி, தொழிலதிபர் போன்ற பல்வேறு வரி வகையில் வரி செலுத்தும் பிரிவினர் உள்ளனர். வரி செலுத்தும் ஒவ்வொருவருக்கும் அவரவர் வணிகத்தின் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு வடிவங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒருவர் சரியான படிவத்தை தேர்வு செய்ய வேண்டும் இல்லையெனில் தனிநபர் மீண்டும், வருமான வரி தாக்கல் செய்யும் நிலை ஏற்படலாம்.

TDS விவரங்கள்:

வருமான வரி தாக்கல் செய்யும் போது, TDS அதாவது, வருமான வரி மூல வருமானத்தில் கழிக்கப்பட்ட விவரங்கள்,  சரியாக உள்ளதா என்பதை நன்றாக சரிபார்ப்பது அவசியம், ஏனெனில் இதில் TDS மற்றும் தனிநபர் வருமானத்தில் வரி செலுத்துதல் ஆகியவை அடங்கும்.

ALSO READ: உங்களிடம் Airtel சிம் உள்ளதா? இப்படி செய்தால், ரூ.4 லட்சம் மதிப்பிலான நன்மைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

More Stories