பாஸ்போர்ட் விசாரணைக்காக சென்ற காவலர்கள் 7 சவரன் நகையை திருடியதாக இளம்பெண் புகார்

2021-08-16@ 13:58:21

ஈரோடு: பாஸ்போர்ட் விசாரணைக்காக சென்ற காவலர்கள் 7 சவரன் நகையை திருடியதாக இளம்பெண் புகார் அளித்துள்ளார். ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் முறையீடு செய்துள்ளார். நிஷாந்தி என்பவரது கணவரின் பாஸ்போர்ட் விசாரணைக்கு கடந்த மார்ச் மாதம் 4 காவலர்கள் சென்றுள்ளனர்.