சென்னை: முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சர்களாக நியமிக்கப்படுகின்றனர் என தமிழக அரசு கூறியுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 38 கோயில்களில் அர்ச்சகர்கள் நியமன அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க கோரி ஆதி சைவ சிவச்சாரியார்கள் சேவா சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.