ஆவடி: அம்பத்தூர், கள்ளிக்குப்பம் சோதனைச்சாவடியில் தனிப்படை போலீசார் இரு தினங்களுக்கு முன் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 3 பேர் சந்தேகத்திற்கு இடமாக விலை உயர்ந்த பைக்குகளில் வந்தனர். விசாரணையில், செங்குன்றம் அருகே ரெட்டேரி கடப்பா ரோடு சந்திரலிங்கம் தெருவை சேர்ந்த முத்துகுமார்(19), பெரம்பலூர் மாவட்டம் துறையூர் மெயின் ரோடு குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(20) பெரம்பலூர் துறைமங்கலம் சி.ஆர்.கேம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(18) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் மூவரும் சேர்ந்து அம்பத்தூர், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீடு, தெருக்களில் நிறுத்திவைக்கப்பட்ட அதிவேக பைக்குகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்களை கைது செய்து 14 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் என கூறப்படுகிறது.