ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43.58 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,358,168 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 206,955,609 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 185,575,460 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 103,363 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு தற்போது 17,021,981 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று அதிகம் பரவிய நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மெக்சிகோவில் 22,758 பேருக்கும், தாய்லாந்தில் 22,086 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மெக்சிகோவில் 603 பேரும், தாய்லாந்தில் 217 பேரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 637,161 பேரும், பிரேசிலில் 567,914 பேரும், இந்தியாவில் 430,762 பேரும், மெக்சிகோவில் 247,414 பேரும், பெரூவில் 197,209 பேரும் உயிரிழந்துள்ளனர்.