நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் ரூ.4.50 இருந்த முட்டையின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.4.20 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் முட்டை அதிகமாக தேக்கமடைந்துள்ளதால் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் முட்டை ஒன்றின் விலை 4.60 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.