சொல்லிட்டாங்க...

2021-08-12@ 01:02:24

உஜ்வாலா திட்டத்தில் வழங்கப்பட்ட 90% சிலிண்டர்கள் பயன்படுத்தப்படவில்லை. பெண்கள் அடுப்பில் சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

வேளாண் சட்ட விவகாரத்தில் அரசியல் கட்சியினர் வேண்டுமென்றே அரசியல் செய்கின்றனர். விவசாயிகள் இந்த சட்டத்தை வரவேற்கின்றனர்.
- தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை

முந்தைய அரசு கொடுத்த அனுமதியை ரத்து செய்து, கெயில் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்ற தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும்.
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

புவி வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் காலநிலை அவசர நிலையை பிரகடனப்படுத்த அரசுகள் முன்வர வேண்டும்.
- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி