ரேசில் ஈடுபட்ட பைக்குகள் பறிமுதல்

2021-08-12@ 00:07:42

பெரம்பூர்: பெரம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாகவும், குறுகிய சாலைகளில் அதிவேகமாக சென்று பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு தலைமையில் செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் உள்ளிட்ட போலீசார் பெரம்பூர் பாரதி சாலை பட்டேல் சாலை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை பிடித்து அதிக சிசி கொண்ட பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Tags:

Race bikes seizure ரேசில் பைக்குகள் பறிமுதல்