ஊழலின் ஊற்றுக்கண்ணே முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான்: பால்வளத்துறை அமைச்சர் நாசர்

2021-08-12@ 14:49:54

சென்னை: ஊழலின் ஊற்றுக்கண்ணே முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார் என்று நாசர் கூறியுள்ளார். கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதி என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.