காப்பகத்தில் தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: இருவர் மீது வழக்குப்பதிவு

2021-08-12@ 00:07:57

பெரம்பூர்: பெரவள்ளூர் ஜவஹர் நகர் 6வது மெயின் ரோடு பகுதியில் தனியார் காப்பகம் 1973ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இதில் இசபெல் ரிச்சர்ட்சன்(56) நிர்வாக செயலாளராக உள்ளார். இந்த காப்பகத்தில் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 130 பேர் தங்கியுள்ளனர். கொரோனா காலகட்டத்தில் இந்த காப்பகத்தில் நிர்வாக செயலாளர் இசபெல் ரிச்சர்ட்சனின் தம்பி பென்னேட் ரிச்சர்ட்சன்(51), காப்பகத்தின் அதிகாரிகள் அனுமதியின்றி காப்பகத்தில் தங்கியுள்ளார்.  அப்போது, அவர் 15 வயது சிறுமி மற்றும் 20 வயது பெண் என இரண்டு பேருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்பேரில் 20 வயது பெண் காப்பகத்தில் உள்ள கமிட்டியிடம் புகார் அளித்தார். நேற்று முன்தினம் மாலை காப்பக நிர்வாகிகள் விசாரணை செய்தனர். அதில் காப்பகத்தில் கமிட்டி உறுப்பினர்களின் அனுமதியின்றி தனது தம்பியை காப்பகத்தில் தங்க வைத்ததற்காக இசபெல் ரிச்சட்சனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட பென்னேட் ரிச்சர்ட்சன் மற்றும் அவரை அனுமதியின்றி தங்க வைத்த அவரது அக்கா இசபெல் ரிச்சர்ட்சன் ஆகியோர் மீது பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:

In the archive female sexual two case காப்பகத்தில் பெண் பாலியல் இருவர் வழக்குப்பதிவு