ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நடுவீரப்பட்டு, காந்திநகர், மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி அமிதா (34). நேற்று முன்தினம் அமிதா, மொபட்டில் அவரது அண்ணி சாகிதாவுடன், நடுவீரப்பட்டு அடுத்த தர்காஸ் பகுதியில், தங்களது குழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளிக்கு சென்றனர். பின்னர், பள்ளியில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டனர். தாம்பரம் - சோமங்கலம் சாலையில் தர்காஸ் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த 2 பேர், அமிதா கழுத்தில் இருந்த 2 சவரன் நகையை பறித்து கொண்டு தப்பினர். புகாரின்படி சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.