கினியாவில் கண்டறியப்பட்டுள்ள மார்பக் வைரஸ் கொரோனாவை போன்று வேகமாக பரவும்!: பாதிக்கப்பட்டவர்களில் 88% உயிரிழப்பதாக WHO எச்சரிக்கை..!!

2021-08-11@ 11:05:20

கினியா: ஆப்ரிக்க நாடான கினியாவில் கண்டறியப்பட்டுள்ள மார்பக் எனப்படும் வைரஸ் கொரோனாவை போன்று வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலகத்தையே அச்சுறுத்திய எபோலா-வை போன்று மார்பக் எனப்படும் புதிய வகை வைரஸ் கினியா நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. விலங்கில் இருந்து மனிதனுக்கு பரவியுள்ள இந்த வைரஸ், கொரோனா வைரஸை போன்று மனிதனில் இருந்து மனிதனுக்கு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்கியவர்களில் 88 சதவீதம் பேர் உயிரிழப்பதாகவும், நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதன் மூலமாகவே இந்த வைரஸ் தொற்றை தடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்படும் என்றும் நோய் தொற்று தீவிரம் அடையும் போது மஞ்சள் காமாலை, சிறுநீரக பாதிப்பு, எடை இழப்பு உள்ளிட்டவை ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் WHO எச்சரித்துள்ளது.

உடலின் பல பகுதிகளில் இருந்து ரத்தப்போக்கு ஏற்படுவதால் தான் உயிரிழப்பு அதிகளவில் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நோயாளியின் உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தின் மூலமாகவும் நோய் தொற்று பரவும் என எச்சரித்துள்ள உலக சுகாதார அமைப்பு, மார்பக் வைரஸ் தாக்கிய 8 அல்லது 9 நாட்களில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் கூறியுள்ளது.

Tags:

கொரோனா மார்பக் வைரஸ் WHO