சென்னை: தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நாட்களில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்தும் வந்தது. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி ஒரு கிராம் 4,531க்கும், சவரன் 36,248க்கும் விற்கப்பட்டது. 5ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது, கிராமுக்கு 8 குறைந்து ஒரு கிராம் 4,523க்கும், சவரனுக்கு 64 குறைந்து ஒரு சவரன் 36,184க்கும் விற்கப்பட்டது.6ம் தேதி கிராமுக்கு 22 குறைந்து ஒரு கிராம் 4,501க்கும், சவரனுக்கு 176 குறைந்து ஒரு சவரன் 36,008க்கும் விற்கப்பட்டது. 3வது நாளாக 7ம் தேதி தங்கம் விலை கிடு, கிடுவென சரிவை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு 61 குறைந்து ஒரு கிராம் 4,440க்கும், சவரனுக்கு 488 குறைந்து ஒரு சவரன் 35,520க்கும் விற்கப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், நேற்று சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. இந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,380 க்கும் ஒரு சவரன் ரூ.35,040 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70 க்கு விற்பனையாகிறது. தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1,208க்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை 36 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்ததால் நகை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்.