திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி ைமயம் அறிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இன்று முதல் வரும் 16ம் தேதிவரை ேகரளாவில் 9 மாவட்டங்களில பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, ேகாட்டயம் உட்பட 9 மாவட்டங்களில் 16ம் தேதிவரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை கடல் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.