இசையமைப்பாளர் தற்கொலை

2021-07-13@ 00:26:25

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் 1990களில் முன்னணி இசை அமைப்பாளராக இருந்தவர் முரளி சித்தாரா (65). 1987ல் தீ காற்று என்ற படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு ஏராளமான படங்களுக்கு இசை அமைத்து உள்ளார். ஏசுதாஸ் அவரை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.


முரளிசித்தாரா திருவனந்தபுரம் வட்டியூர்காவில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அவரது படுக்கை அறை கதவை நீண்ட நேரமாக திறக்காததால் குடும்பத்தினர் உடைத்து பார்த்தார்கள். அப்ேபாது தூக்கில் தொங்கிய நிலையில் முரளி சித்தாரா இறந்து கிடந்தார்.