'தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும்' - அமைச்சர் பொன்முடி

2021-07-13@ 11:44:06

சென்னை: தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முதலமைச்சர் முடிவு செய்வார் எனவும் கூறினார்.