தாம்பரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது அவதூறாக டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதியும், தாம்பரம் பெருநகர 30வது வட்ட பிரதிநிதியுமாகிய குறிஞ்சி சிவா(56) இதுதொடர்பாக தாம்பரம் காவல் நிலைத்தில் நேற்று புகாரளித்தார்.அதில் டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோர் மீது அவதூறாக பதிவிட்டுள்ளதாக கூறியிருந்தார். அதன்படி தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.