மும்பை: ஏற்ற இறக்கங்களுடன் இருந்த இந்திய பங்குச்சந்தைகளின் குறியீட்டு எண்கள் பெரிய மாற்றமின்றி முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நண்பகல் வர்த்தகத்தில் 314 புள்ளி உயர்ந்து 52,700 புள்ளிகளானது. வர்த்தக நேர முடிவில் பெருமளவு சரிந்த சென்செக்ஸ் 13 புள்ளிகள் குறைந்து 52,373 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3 புள்ளிகள் உயர்ந்து 15,693 புள்ளிகளானது.