பேராசிரியரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

2021-07-12@ 00:11:19

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மாணிக்க நகர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் அம்பிகைதாஸ்(49). வழக்கறிஞர். சென்னை பல்கலைக்கழகத்தில் கவுரவ சட்ட பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு சட்ட புத்தகங்களும் எழுதியுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவர் திருவொற்றியூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்து விட்டு திரும்பிச் சென்றபோது 2 வாலிபர்கள் அவரை கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடினர். புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் தண்டையார்பேட்டை வ.உசி. நகரை சேர்ந்த சுதர்சன் தனது குடும்ப பிரச்னையில் அம்பிகைதாஸ் தலையிட்டதால் ஆத்திரமடைந்து திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தை சேர்ந்த ஜேம்ஸ், ராகுல் ஆகியோரை அழைத்து வந்து அம்பிகைதாஸை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, ஜேம்ஸ், ராகுல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான சுதர்சனத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.