புலப்படும் பணியும், புலப்படாத பெண்களும் தொகுப்பிற்கு வரவேற்கிறோம்
கிராமப்புற பெண்களின் அன்றாட பணிகளை சிறப்பாக விளக்கும் புகைப்பட கண்காட்சி இது. பார்வையாளர்களிடம் காணொளி பயண அனுபவத்தை அளிக்கும் இப்புகைப்படங்கள் யாவும் 1993 முதல் 2002ஆம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பத்து மாநிலங்களில் பி.சாய்நாத் அவர்களால் எடுக்கப்பட்டவை. பொருளாதார சீர்திருத்தத்தின் முதல் பத்தாண்டு காலத்தையும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் தொடங்குவதற்கு முன்பான இரண்டு ஆண்டுகளையும் உள்ளடக்கியது.
2002ஆம் ஆண்டு நான்கு பகுதிகளாக வைக்கப்பட்ட இந்த நேரடி கண்காட்சியை இதுவரை 700,000க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், தொழிற்சாலை வாயில்கள், விவசாய மற்றும் பிற தொழில் சார்ந்த தொழிலாளர்களின் பெருந்திரள் கூட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழக இடங்கள் போன்றவற்றில் புகைப்படமாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இப்போது ஒட்டுமொத்த புகைப்படங்களும் இணைய வழி கண்காட்சியாக முதன்முறையாக வைக்கப்பட்டுள்ளன.
புலப்படும் பணியும், புலப்படாத பெண்களும் என்பது முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட முதல் புகைப்பட கண்காட்சி எனலாம். இது நேரடி கண்காட்சியைப் போன்ற (மிகப்பெரிய புகைப்படங்களும், அதற்குரிய சிறிய விளக்க வரிகளும்) உணர்வை அளிப்பது. அவை ஆக்கப்பூர்வமாக இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் சராசரியாக 2-3 நிமிடங்களுக்கான காணொலியாக உள்ளன. கண்காட்சியின் இறுதியாக வரும் பகுதி சுமார் 7 நிமிட காணொளி.
இந்த விளக்க காட்சி உங்களை, பார்வையாளர்களை காணொளியை காணச் செய்வதோடு புகைப்படக்காரரின் வர்ணனையும், விளக்க வரிகளை படிக்க வைக்கிறது. சிறந்த ரெசல்யூஷனில் ஒவ்வொரு புகைப்படமும் இடம்பெற்றுள்ளன.
காணொளியைக் கண்ட பிறகு நீங்கள் அப்பகுதியை கீழே இழுக்கலாம். ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள காணொளிக்கு கீழ் நீங்கள் குறிப்பிட்ட பகுதியின் புகைப்படங்கள், அவற்றின் விளக்க வரிகளையும் காணலாம்.
நீங்கள் விரும்பினால், கீழுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட இணைப்பிற்கும் சென்று ஒவ்வொரு பகுதியாக சொடுக்கியும் காணலாம். உங்கள் ஆர்வத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் ஒட்டுமொத்த கண்காட்சியையும் ஒரே தொகுப்பாக காண கீழுள்ள வரிசையில் கடைசி இணைப்பை சொடுக்கவும்.
பகுதி 2: வாழ்நாள் வளைவு
பகுதி 6: வாழ்வை திரட்டுகின்றனர்
பகுதி 7: சந்தைக்கு, சந்தைக்கு…
பகுதி 9அ: பசுக்கள் வீடு திரும்பும்வரை
பகுதி 9ஆ: சுத்தம் செய்தல்!
பகுதி 10: விஷயங்களில் பிடிமானம்
அல்லது முழுவதுமே ஒரே ஷாட்டாக இருக்கும். (இது மொத்தம் 32 நிமிடங்கள் எடுக்கின்றன ஆனால் பகுதி பகுதியாக ஒரு வரிசையில் முழு கண்காட்சியையும் காட்டிவிடும்). கட்டுரையை படிக்க, நீங்கள் தனித்தனியாக பலகங்களை பார்க்க வேண்டும். ஆனால் 32-நிமிட கண்காட்சியை முழுமையாக பார்க்க இந்த லின்கை பயன்படுத்தலாம்.
புலப்படும் பணியும், புலப்படாத பெண்களும் - கிராமப்புற இந்தியாவில் மகளிரும் அவர்களின் பணியும் (காணொளி)
தமிழில்: சவிதா