சென்னை: தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பசரன், அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு நேற்று முன்தினம் வந்தார். அங்கு தொழிலாளர்களுக்கு தடுப்பு ஊசி போடும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர், சிட்கோ தொழில் நிறுவனத்தில் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார். பின்னர், அமைச்சர் அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சிட்கோ தொழில் நிறுவனங்களில் பலர் தொழில் செய்ய முடியாமல் 5முதல் 8ஆண்டு வரை தொழிற்சாலைகளை மூடி வைத்துள்ளனர். இந்த தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, மூடிய தொழில் முனைவோரை வைத்து மீண்டும் தொழிற்சாலைகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்கள் முன்வராவிட்டால், அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தி விட்டு வேறு நபர்களை கொண்டு தொழிற்சாலைகளை இயக்க ஆவணசெய்வோம். இந்த தொழிற்சாலைகள் மூடியதற்கு, கடந்த அதிமுக ஆட்சி நிர்வாக சீர்கேடுகளே காரணம். , சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நலிவடைய கூடாது என கொரோனா தொற்றுநோய் காலத்தில் பாதுகாக்க வேண்டும் எனக் கருதி, முதலீட்டு மானியத்தை முன்கூட்டியே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். இந்த ஆண்டுக்கு ரூ.260கோடி முதலீட்டு பணத்தை கொடுக்க வேண்டியதை, முன்கூட்டியே ரூ.168கோடியை வழங்கியுள்ளார். இதனை ஆறு மாதத்திற்கு முன்பாகவே சேரக்கூடிய வகையில் கொடுத்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.