கர்நாடக அரசு கட்டிய அணைக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்க கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

2021-07-05@ 02:04:24

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தென் பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே யார்கோள் என்ற வனப் பகுதியில் கர்நாடக அரசு புதிய அணையை கட்டி முடித்து இருப்பது தமிழக விவசாயிகள் இடையே மிகப் பெரிய அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மதகே இல்லாமல் 162 அடி உயரத்திற்கு அணை கட்டப்பட்டு இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. தென் பெண்ணையாற்றில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவது ஏற்புடையதல்ல. மத்திய அரசு இதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க கூடாது. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.