புதுடெல்லி: இந்தியாவைப் போலவே அமெரிக்காவும் இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டிருந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு கிபி.1776ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சுதந்திரக் காற்றை சுவாசித்தது. தற்போது சுதந்திரமடைந்து 245ம் ஆண்டு தொடங்கி இருப்பதை அமெரிக்கர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், ‘துடிப்பான ஜனநாயக தேசங்களாக விளங்கும் இந்தியாவும், அமெரிக்காவும் சுதந்திரத்தின் மதிப்பை உண ர்ந்தவை. நம் இரு நாடுகளின் கூட்டு, இன்று சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதிபர் பைடனுக்கும் அமெரிக்க மக்களுக்கும் வாழ்த்துக்கள்,’ என்றுகுறிப்பிட்டுள்ளார்.