கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 18 பேர் கைது
2021-07-04@ 19:01:05
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,300 லிட்டர் சாராய ஊரல், 431 லிட்டர் சாராயம், 45 மது பாட்டில்களை பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர்.