சில்லரை, மொத்த விற்பனை வர்த்தகர்களையும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கீழ் இணைத்திருப்பதன் மூலம் ஒன்றிய அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளது. :- பிரதமர் மோடி.
ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்தது தற்போது தெளிவாக தெரிகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். :- காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா.
கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நன்மையை கருத்தில் கொண்டு இரண்டு மாநிலத்தின் உறவு மேம்படும் வகையில் மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. :- கர்நாடக முதல்வர் எடியூரப்பா.
உத்தரகாண்டில் உள்ள பிரச்னைகளை மத்திய அரசு சரிசெய்யவில்லை. முதல்வர்களை மாற்றம் செய்து அரசியல் நிலையற்ற தன்மையை பாஜ ஏற்படுத்திவிட்டது. :- காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரீஸ் ராவத்.