அமமுக கட்சி நிர்வாகிகள் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

2021-07-04@ 00:15:38

சென்னை: திருவள்ளூர், சென்னை மாவட்ட அமமுக கட்சி நிர்வாகிகள் பலர் விலகி எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை நேற்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், மத்திய சென்னை மாவட்ட அமமுகவை சேர்ந்த மாநில, மாவட்ட, பகுதி அளவிலான பொறுப்புகளில் இருந்தவர்கள் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அதேபோன்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி சுமார் 60 பேர் அதிமுகவில் இணைந்தனர். அப்போது அதிமுக மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, ராஜேஷ், விருகை ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.