சென்னை: தங்கம் விலை நேற்று 2வது நாளாக உயர்ந்தது. இதனால், நகை வாங்குவோரை அதிர்ச்யடைந்துள்ளனர். அதே நேரத்தில் மீண்டும் தங்கம் விலை 36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. ஒரு நாள் விலை அதிகரித்தால், நாட்களுக்கு பிறகு அதே வேகத்தில் குறைகிறது. தங்கம் விலையின், ஏற்றம் இறக்கத்தால் நகையை இப்போதே வாங்கலாமா அல்லது பொறுத்திருந்து வாங்கலாமா என்ற குழப்ப நிலையில் நகை வாங்குவோர் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 30ம் ஒரு கிராம் தங்கம்ரூ.406க்கும், ஒரு சவரன்ரூ.35,248க்கும் விற்கப்பட்டது.
நேற்று முன்தினம் கிராமுக்குரூ.39 அதிகரித்து ஒரு கிராம்ரூ.4,445க்கும், சவரனுக்குரூ.312 அதிகரித்து ஒரு சவரன்ரூ.35,560க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் 2வது நாளாக நேற்று காலையில் தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்குரூ.20 அதிகரித்து ஒரு கிராம்ரூ.4,465க்கும், சவரனுக்குரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,720க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதாவது நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்குரூ.35 அதிகரித்து ஒரு கிராம்ரூ.4,480க்கும், சவரனுக்குரூ.280 அதிகரித்து ஒரு சவரன்ரூ.35,840க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்குரூ.592 அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன்ரூ.36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தங்கம் விலை அதிகரிப்பு நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது.