
சமீப காலங்களாக, பேஸ்புக் (Facebook) , ட்விட்டர் (Twitter), யூட்யூப் (Youtube) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. பிரபலமாக உள்ளவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, அவர்களது பெயரில் கணக்குகளை தொடக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பல சைபர் குற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
உலகளவில் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் இது போன்ற போலி கணக்குகளால் (Fake Account), கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பாடுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் (India) தொழில்நுட்ப விதிகளின்படி ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப் ஆகிய ஆகிய சமூக வலைதளங்களில் உள்ளபோலிக் கணக்குகளை முற்றிலும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி, போலி கணக்குகள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் அளிக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்து போலி கணக்குகளை 24 மணி நேரத்திற்குள் முடக்க வேண்டும் என சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் (Social Media) அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் போன்ற பிரபலங்களின் கணக்குகளில் இருந்து புகைப்படங்களை எடுத்து, அவர்களின் பெயரில் போலி கணக்குகளை ஆரம்பித்து, பணம் வசூலிக்கும் போக்கு சமீபத்தில் மிகவும் அதிகரித்துள்ளது
பிரபலங்களின் புகைப்படத்தை பார்த்து, அது சம்பந்தப்பட்ட சமூக வலைதள கணக்கு என தவறாக நினைத்து, அதை பலர் பின்தொடர்கின்றனர்.
அது மட்டுமால்லாது, பாலோயர்ஸ் அதிகம் உள்ள சாமானியர்களின் புகைப்படங்களை திருடி, அவர்கள் பெயரிலும் போலி கணக்குகள் துவங்கி, அவர்களின் நட்பு வட்டத்தில் உதவி செய்யுமாறு கூறி பணம் கேட்டு மோசடி செய்யும் வழக்குகளும், மிகவும் அதிகரித்து உள்ளன.
இதனை கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளில் கீழ், மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி ‘பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துவங்கப்படும் போலி கணக்குகள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால்,அது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து 24 மணி நேரத்திற்குள் அந்த போலி கணக்குகள் முடக்கப்பட வேண்டும்’ என மத்திய அரசு ஒரு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.