தட்டம்மை தடுப்பூசி குழந்தைகளை கொரோனாவிலிருந்து காக்குமா; ஆய்வு கூறுவது என்ன

புதுடெல்லி: குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படும் COVID-19  மூன்றாவது அலைக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், ஆராய்ச்சியாளர்கள் வைரஸின் அம்சங்களை ஆராய்ந்து, கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவின் வழக்கமான நோய்த்தடுப்புத் திட்டத்தின் தட்டம்மை தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்தபட்டு வருகின்றன தட்டம்மை  தடுப்பூசிகள் (MCV), COVID-19  நோய்த்தொற்றுக்கு காரணமான SARS-CoV-2 வைரஸுக்கு எதிராக 87.5% செயல்திறனைக் கொண்டிருப்பதாக, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

புனேவில் உள்ள பி.ஜே மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள், தட்டம்மை நோய்க்கான தடுப்பூசி, குழந்தைகளுக்கு COVID-19 பரவுவதை 87.5 சதவீதம் வரை கட்டுப்படுத்த உதவும் என்று கூறினர். தட்டம்மை தடுப்பூசி வழங்கப்பட்ட 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு SARS-CoV-2 வைரஸின் மிக லேசான அறிகுறிகள் தான் இருந்தன என ஆய்வு கூறுகிறது.

ALSO READ | COVID-19: இந்தியாவில் இதுவரை சுமார் 40 டெல்டா பிளஸ் திரிபு வைரஸ் பாதிப்பு

கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் கொரோனா தொற்று ஏற்படாதவர்கள் என 1 முதல் 17 வயதிற்குட்பட்ட 548 குழந்தைகளிடம் இந்த  ஆய்வு நடத்தப்பட்டது. 

சமூக மருத்துவத் துறையைச் சேர்ந்த பிஜே மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், குழந்தை மருத்துவர் டாக்டர் நிலேஷ் குஜார் உடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.  இந்த ஆய்விற்கு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) நிதியளித்தது. இந்த ஆய்வை உறுதிப்படுத்த மேலும் மருத்துவ பரிசோதனைகள் தேவை.

மேலும் ஆய்வு மேற்கொண்டு தட்டம்மை தடுப்பூசி கொரோனா பரவலை தடுக்கும் என நிரூபிக்கப்பட்டால், தட்டம்மை தடுப்பூசி வழங்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்திய நோய் பரவாமல் இருக்க இது பெரிதும் உதவும் என்பது நிரூபிக்கப்படும். COVID-19 மூன்றாவது அலையை எளிதாக கையாண்டு அதனை தடுக்க உதவும். மேலும் COVID-19 நோய்த்தொற்றுகளின் தீவிரத்தை குறைக்கக்கூடும்.

ALSO READ | COVID-19 தடுப்பூசி மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறதா; சுகாதார அமைச்சகம் கூறுவது என்ன..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Read More | https://zeenews.india.com/tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *