Sputnik V தடுப்பூசியை தயாரிக்க DCGI அனுமதியை பெற்றது சீரம் நிறுவனம்: தீருமா தடுப்பூசி தட்டுப்பாடு?

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் பரவல் சற்றே குறைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி முழு முனைப்புடன் நடந்து வருகிறது. பல இடங்களில் தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடும் உள்ளது. 

இந்த நிலையில், ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி-ஐ (Sputnik V Vaccine) இந்தியாவில் தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII)  அனுமதி பெற்றுள்ளது. SII-க்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான  DCGI கோவிட் -19 தடுப்பூசி ஸ்புட்னிக்-வி-ஐ தயாரிக்க ஒப்புதல் அளித்தது. 

சில நிபந்தனைகளுடன் உற்பத்தி சோதனை மற்றும் பகுப்பாய்வு செய்ய எஸ்ஐஐ அனுமதி அளித்தது என வெள்ளிக்கிழமை (ஜூன் 4) அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி பி.டி.ஐ தெரிவித்தது.

புனேவை தளமாகக் கொண்ட SII நிறுவனம் டி.சி.ஜி.ஐ.யின் அனுமதியைக் கோரி விண்ணப்பத்தை சமர்ப்பித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

SII, ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள கமலியா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜியுடன் கூட்டு சேர்ந்து, அதன் ஹடப்சர் உற்பத்தி வளாகத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. 

ALSO READ: Sputnik V தடுப்பூசியை தயாரிக்க அனுமதி கோரும் சீரம் நிறுவனம்

“டி.சி.ஜி.ஐ சில நிபந்தனைகளுடன், SII நிறுவனத்தின் உரிமம் பெற்ற ஹடப்சர் தயாரிப்பு வளாகத்தில், தடுப்பூசியின் பரிசோதனை (Vaccine Testing), சோதனை மற்றும் பகுப்பாய்வுடன் இந்தியாவில் ஸ்பூட்னிக் கோவிட் -19 தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது” என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டி.சி.ஜி.ஐ நிர்ணயித்த நான்கு நிபந்தனைகளின்படி, செல் வங்கி மற்றும் வைரஸ் ஸ்டாக்கை மாற்றுவதற்காக எஸ்.ஐ.ஐ மற்றும் கமலேயா ஆராய்ச்சி தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இடையிலான ஒப்பந்தத்தின் நகலை நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், கமலேயாவுடனான தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான ஒப்பந்தத்தின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும் .

செல் வங்கி மற்றும் வைரஸ் ஸ்டாக்கை இறக்குமதி செய்வதற்கான ஆர்.சி.ஜி.எம் அனுமதியின் நகலையும், வைரஸ் வெக்டார் தடுப்பூசி ஸ்பூட்னிக் வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டைத் தொடங்க ஆர்.சி.ஜி.எம் அனுமதியின் நகலையும் எஸ்.ஐ.ஐ சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி தற்போது இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்களால் தயாரிக்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்த நடவடிக்கை நாட்டின் தடுப்பூசி உற்பத்தியை உயர்த்தும் என்று கூறி, கோவிட் -19 தடுப்பூசி (COVID-19 Vaccination) தயாரிப்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்கிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்காவின் முயற்சிகளை எஸ்.ஐ.ஐ தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா பாராட்டியுள்ளார்.

ட்விட்டரில் இது குறித்து தெரிவித்த அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய வெளியுறவுத் துறைக்கு நன்றி தெரிவித்து, “… இந்த கொள்கை மாற்றம் உலகளவில் மற்றும் இந்தியாவிற்கு மூலப்பொருட்களின் விநியோகத்தை அதிகரிக்கும் என்று நம்புகிறேன். இது எங்கள் தடுப்பூசி உற்பத்தி திறனை அதிகரித்து இந்த தொற்றுநோய்க்கு எதிரான நமது ஒன்றிணைந்த போராட்டத்தை வலுப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

ALSO READ: ஜோ பைடன், ஜெய்சங்கருக்கு நன்றி; இனி தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கும்: பூனவல்லா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Read More | https://zeenews.india.com/tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *