போலி 500 ரூபாய் நோட்டை எவ்வாறு கண்டறிவது என்பதை இங்கே காண்க

Fake Indian Currency: ரூ. 500 நோட்டுகளில் போலியான நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

அதாவது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட அறிக்கையின் படி, 2020-21 ஆம் ஆண்டில் ரூ .500 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் (Fake Banknote) அதிக புழக்கத்தில் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு கள்ள நோட்டு புழக்கத்தின் மொத்த மதிப்பில் 500 ரூபாய் கள்ள நோட்டு 31.3 சதவீதம் அதிகரித்துள்ளது. 

புதிய 500 ரூபாய் மதிப்புள்ள 39,453 போலி ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1.11 லட்சம் மதிப்புள்ள போலி ரூ .100 நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 2.09 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இந்திய சந்தையில் கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவதால், ரூபாய் நோட்டுக்களை வாங்கும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகள் போலியானதா? என்பதை எப்படி கண்டிப்பிடிப்பது என சில வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. 

ALSO READ: 2020-21 ஆம் ஆண்டில் போலி ரூ .500 நோட்டுகள் 31% அதிகரித்துள்ளன: கவனமாக இருங்கள்!

புதிய 500 ரூபாய் நோட்டுகளின் அம்சங்கள் / போலி 500 ரூபாய் நோட்டை எவ்வாறு கண்டறிவது: 
ரூபாய் நோட்டின் முன் பக்கம்:

1. ரூபாய் மதிப்பு எண்ணின் ஸீ-த்ரூ ரெஜிஸ்டர் (ஒளி புகும்போது காட்சி தெரியும்)

2. ரூபாய் மதிப்பு எண்ணின் மறைவிம்பம் (மறைமுகமாக காணப்படும்)

3. தேவநாகிரி எழுத்தில் ரூபாய் மதிப்பு எண்.

4. மகாத்மா காந்தி புகைப்படத்தின் நோக்குநிலை மற்றும் நிலையில் மாற்றம்.

5. ரூபாய் நோட்டை சாய்க்கும்போது, விண்டோட் செக்யூரிட்டி த்ரெட்டின் (பாதுகாப்பு தொடர் வரி) நிறம் பச்சையிலிருந்து நீலமாக மாறும்.

6. உத்தரவாத விதி, உறுதிப்பாட்டு விதியைக் கொண்டுள்ள ஆளுநரின் கையெழுத்து மற்றும் ரிசர்வ் வங்கியின் சின்னம் ஆகியவை வலது பக்கம் நகர்த்தப்பட்டுள்ளன.

7. போர்ட்ரைட் மற்றும் எலக்ட்ரோடைப் (மின்தட்டச்சு) வாட்டர்மார்க்.

8. மேல்பக்க இடது புறத்திலும் கீழ்பக்க வலது புறத்திலும் சிறிய அளவிலிருந்து பெரிய அளவில் காணப்படும் எண் குழு

9. கீழ் பக்க வலதுபுறத்தில் ரூபாய்க்கான சின்னத்துடன் மாறும் வண்ணத்தில் (பச்சையிலிருந்து நீலம்) ரூபாய் மதிப்பு எண்.

10. வலதுபுறத்தில் அசோகர் சின்னம்.

கண்பார்வையற்றவர்களுக்கான அம்சங்கள்

மகாத்மா காந்தி புகைப்படம், அசோகர் சின்னம், தொடர் வரிகள் மற்றும் அடையாள குறியீடுகள் ஆகியவை அடையாளம் கண்டறியப்படும் வகையில் சற்றே உயர்ந்திருக்கும். 

11. வலதுபுறத்தில் ‘ரூ.500’ இருக்கும் வட்டம் உயர்த்தப்பட்ட அச்சில் இருக்கும். 

12. வலது மற்றும் இடது புறம் உள்ள 5 ப்ளீட் வரிகள் உயர்த்தப்பட்ட அச்சில் இருக்கும். 

ரூபாய் நோட்டின் பின் பக்கம்:

13. நோட்டின் இடதுபுறத்தில் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு.

14. ‘ஸ்வச்ச பாரத்’ லோகோவும் (சின்னமும்) அதன் சொற்றொடரும் (ஸ்லோகன்).

15. மத்தியில் மொழிகளின் பேனல்.

16.செங்கோட்டை – இந்திய கொடியுடன் காணப்படும் இந்திய பாரம்பரிய தளம்.

17. வலதுபுறத்தில்  தேவநாகிரியில் ரூபாய் மதிப்பு எண்.

ALSO READ: கிழிந்த ரூபாய் நோட்டை மாற்ற வேண்டுமா? இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil  மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More | https://zeenews.india.com/tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *