ஆலங்கட்டி மழையில் இருந்து மலர்களை பாதுகாக்க மேரிகோல்டு மலர் தொட்டிகள் மாடத்திற்கு மாற்றம்

2021-05-11@ 14:29:45

ஊட்டி: ஆலங்கட்டி மழையில் இருந்து மலர்களை மேரிகோல்டு மலர்களை பாதுகாக்க மாடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வழகிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யும். சில சமயங்களில் மட்டும் கன மழை பெய்யும். கனமழையின்போது மரங்கள் விழுவது, நிலச்சரிவு ஏற்படுவது போன்ற பேரிடர்கள் ஏற்படும். ஆனால், ஆலங்கட்டி மழை பெய்யாது. பொதுவாக கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கன மழை பெய்யும். சில சமயங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய கன மழையும் பெய்யும்.

இச்சமயங்களில் மலை காய்கறிகள், விவசாய நிலங்கள், மலர் செடிகள் பாதிக்கும். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. ஊட்டியில் இரவு நேரங்களில் சில சமயங்களில் கன மழை கொட்டி விடுகிறது. அதேபோல், சில சமயங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்கிறது. இது போன்று ஆலங்கட்டி மழை பெய்தால், மலர்கள் பாதிக்கும். தற்போது தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக தயார் செய்யப்பட்ட மலர் செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. குறிப்பாக, மேரிகோல்டு மலர்கள் அதிகளவு பூத்துள்ளன.

இந்த மலர் செடிகள் ஆலங்கட்டி மழை பெய்தால் பாதிக்கும் என்பதால், தற்போது தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள இன்கா மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு மலர்கள் அனைத்தும் மாடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.