கொரோனாவுக்கு ரயில்வேயில் 1,952 ஊழியர்கள் மரணம்

2021-05-11@ 00:22:20

புதுடெல்லி: உலகிலேயே அதிகமான ஊழியர்களை கொண்ட நிறுவனம் இந்திய ரயில்வே. இதில் சுமார் 13 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். ரயில்வேயையும் கொரோனா கடுமையாக பாதித்துள்ளது.  இதுகுறித்து ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா கூறுகையில், ‘ரயில்வேயில் தினசரி 1000 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை 1,952 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். ரயில்வே  மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரித்துள்ளோம். ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்று கூறியுள்ளார். ரயில்வே ஊழியர்களின் உயிரிழப்புக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரயில்வே சங்கங்கள் கோரிக்கைகள் வைத்துள்ளன.