காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை
2021-05-11@ 10:03:09
காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் உள்ள கோமர்நாக் அருகே வைலூ என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. வைலூ என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த பகுதிக்குச் சென்று பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். தேடுதல் வேட்டையில் அந்த பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது கணடுப்பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் பங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இரு தரப்பினரக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.