குடும்பத்தினரை காக்க கொரோனா பாதித்த தாசில்தார் தற்கொலை: துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்

2021-05-11@ 00:25:54

சிக்கமகளூரு: கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டம்  தரிகரே தாலுகா பாலேனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சோமநாயக் (70). ஓய்வு பெற்ற  தாசில்தாரான இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்  கொரோனா அறிகுறிகள்  ஏற்பட்டதையடுத்து தரிகரேயில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை  செய்து கொண்டார். நேற்று முன்தினம் மாலை இவரின் மொபைல்  எண்ணிற்கு கொரோனா பாசிடிவ் இருப்பதாக தகவல் வந்தது.அதிர்ச்சியடைந்த சோமநாயக் காரை எடுத்து கொண்டு தனக்கு  சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார்.

அங்கு தன் குடும்பத்தினருக்கு  கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக  தான் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம்  எழுதி வைத்துவிட்டு காருக்குள்ளேயே  துப்பாக்கியால் தன்னைதானே சுட்டு   தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தரிகரே ேபாலீசார் சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.