GOOD NEWS! DRDO-வின் 2-deoxy-D-glucose கொரோனா மருந்தின் பயன்பாட்டிற்கு DCGI ஒப்புதல்

நாடு முழுவதும், கொரோனா தொற்று இரண்டாவது அலை  தொடங்கி, மக்கள் அதன் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். அன்றாட தொற்று பாதிப்பு 4 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா காரணமாக 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை (Corona Virus) கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி தான் பேராயுதமாக கருதப்பட்டு வருகிறது. சிகிச்சையை பொறுத்தவரை, கொரோனா தொற்று நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் (Remdesivir)  மட்டுமே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான DRDO  கொரோனா சிகிச்சையில்  பயன்படுத்த ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. பவுடர் வடிவில் இருக்கும் இந்த மருந்துக்கு டிஆக்ஸி டி- குளுகோஸ் (2-deoxy-D-glucose (2-DG) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்த மருந்தை தண்ணீரில் கலக்கிக் குடிக்கலாம். 

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இந்த மருந்தை DRDO  அமைப்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் (Dr Reddy’s Lab) அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. 

ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning

இந்த மருந்தின் மீதான மூன்றாம் கட்ட பரிசோதனை தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், மருந்தை உட்கொண்ட நோயாளிகள் தொற்றிலிருந்து வேகமாகக் குணமடைவதும் தெரியவந்தது. அதோடு நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவையும் எழுவதில்லை. 

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,01,217 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதனுடன் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,18,86,556 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் சுமார் 37 லட்சம் பேர் சிகிச்சையில் (Corona Treatment) உள்ளனர். 

ALSO READ | மக்களுக்கு உதவ களம் இறங்கிய பாஜக MLA MR. காந்தி, ISRO விடம் இருந்து ஆக்ஸிஜன் சப்ளை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Read More | https://zeenews.india.com/tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *