மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை

2021-05-07@ 07:49:19

தேனி : மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேவதானம், சேத்தூர், சுந்தரராஜபுரம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 36 அடி கொள்ளளவு கொண்ட சாஸ்தா கோவில் அணை நிரம்பியது. அத்துடன் தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.