அமைச்சர்களை குறிவைக்கும் கொரோனா!: தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொற்று உறுதி..!!
2021-05-07@ 10:20:36
சென்னை: தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள விஜயபாஸ்கர், தனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தற்போது தனிமைப்படுத்தி கொண்டதாகவும் அவரை கூறியுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா தொற்று செய்துக் கொள்ளும்படியும், அனைவரும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை முழுவீச்சில் பரவி வருகிறது. கொரோனா முதல் அலையை காட்டிலும் 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவதும், ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படுவதும் சாதாரணமாகிவிட்டது. தற்போது கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், கொரோனாவின் தாக்கம் குறைந்த பாடில்லை. அரசு அதிகாரிகள், முன்களப் பணியார்கள், தூய்மை பணியாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எந்த வித பாகுபாடும் இல்லாமல் கொரோனா தொற்று அனைவரையும் சமமாக பாவித்து தன் பிடியில் சிக்கவைத்து வருகிறது. அந்த வகையில், விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.