மாட்ரிட் மகளிர் ஓபன் காலிறுதியில் பார்தி, பவுலா

2021-05-06@ 03:19:02

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் விளையாட ஆஸ்திரலேியாவின் ஆஷ்லி பார்தி, ஸ்பெயினின் பவுலா படோசா ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளார். அங்கு நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்று ஒன்றில்  ஸ்விட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக்(11வது ரேங்க்),  ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா(62வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் ஆரம்பம் முதலே அசத்தாலாக விளையாடிய  பவுலா 6-4 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.  டை பிரேக்கர் வரை நீண்ட 2வது செட்டையும்  7-5 என்ற புள்ளிகணக்கில் வசப்படுத்தினார்.  அதனால் ஒரு மணி 49நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் பவுலா 2-0 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேற, பெலிண்டா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.   

அதேபோல் மற்றொரு ஆட்டத்தில்  ஆஸ்திரேலியா வீராங்கனை ஆஷ்லி பார்தி(1வது ரேங்க்), செக் குடியரசின்  பெட்ரா குவித்தோவா(12வது ரேங்க்) ஆகியோர் மோதினர். முதல் செட்டை 6-1 என்ற கணக்கில எளில் வென்ற பார்தி, 2வது செட்டை 3-6 என்ற கணக்கில் எளிதில் பெட்ராவிடம் இழந்தார்.  அதனால் சுதாரித்துக் கொணட  பார்தி 3வது செட்டை  6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.  அதனால் ஒரு மணி 48 நிமிடங்கள் நடந்த  இந்த ஆட்டத்தில் ஆஷ்லி பார்தி 2-1 என்ற செட்களில் வென்று காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்.