சரக்கு கப்பலில் சென்ற 14 ஊழியர்களுக்கு கொரோனா

2021-05-06@ 03:17:52

ஜோகன்ஸ்பர்க்: இந்தியாவில் இருந்து 3,300 டன் எடை கொண்ட  அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு கப்பல் தென்னாப்பிரிக்காவிற்கு புறப்பட்டு சென்றது. கடந்த ஞாயிறு அன்று சரக்கு கப்பல் டர்பன் நகரை சென்றடைந்தது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்ததில்,14  கப்பல் ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானது.  இதனை தொடர்ந்து அவர்கள் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கப்பல் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. யாரும் கப்பலுக்குள் செல்வதற்கோ, வெளியேறுவதற்கோ அனுமதி இல்லை.