குடியாத்தம் அருகே கிணற்றில் விழுந்த பசு மீட்பு

2021-05-05@ 13:02:14

குடியாத்தம்: குடியாத்தம் அருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது. குடியாத்தம் அடுத்த காந்திநகர் கல்லேரியை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவருக்கு சொந்தமான பசு மேய்ச்சலுக்கு தனது விவசாய விளை நிலம் அருகே சென்றது. அப்போது, பசு நிலைதடுமாறி 80 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது, கிணற்றுக்குள் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு  இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, முதலில் கட்டுவிரியன் பாம்பை கிணற்றிலிருந்து மீட்டனர். பின்னர், பொதுமக்கள் உதவியுடன் 2 மணி நேரம் போராடி பசுவை உயிருடன் மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Tags:

குடியாத்தம் பசு மீட்பு