மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் கமல் டிவிட்

2021-05-04@ 01:54:23

சென்னை: தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள். சீரமைப்போம் தமிழகத்தை என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம்’ என்று தெரிவித்துள்ளார்.