COVID-19: தனிமைபடுத்தப்பட்ட நோயாளிக்கு மருத்துவமனை சிகிச்சை எப்போது தேவைப்படுகிறது

COVID-19 தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதன் காரணமாக, மருத்துவமனை படுக்கைகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜனின் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், COVID-19  தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை எப்போது எழுகிறது என்பது குறித்தும், அதற்கான அறிகுறிகள் குறித்தும் சுகாதார அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. 

மத்திய சுகாதார அமைச்சகம் தனது சமீபத்திய பரிந்துரையில், ஆக்ஸிஜன் செறிவு குறைவது, அதிகப்படியான சோர்வு என்பது வீட்டு தனிமைப்படுத்தலில் ஒரு COVID-19 நோயாளிக்கு மருத்துவமனை சிகிச்சை தேவை என்பதை குறிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் என்று கூறியுள்ளது.

“வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ள மக்கள், தங்கள் மருத்துவரைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு தங்கள் உடல் நிலை குறித்து தெரிவிக்க வேண்டும். ஆக்ஸிஜன் செறிவு 93 அல்லது அதற்கும் குறைவாக இருந்தாலோ, மயக்கம், மார்பு வலி போன்றவை ஏற்பட்டாலோ,  உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்று எய்ம்ஸ் (டெல்லி) இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். மேலும், வேறு விதமான நோய் உள்ளவர்கள், மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ALSO READ | மம்தா தோல்வியால் ஆத்திரம்; BJP அலுவலகத்தை கொளுத்திய TMC தொண்டர்கள்

மிதமான தொற்று இருக்கும் போது, ஆக்ஸிஜன் சிகிச்சை, ஸ்டெராய்டுகள் மற்றும் ஆன்டிகோகுலண்டுகள் ஆகிய மூன்று வகையான சிகிச்சைகள் பலனளிக்கின்றன என்று குலேரியா மேலும் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ​​டெல்லி எய்ம்ஸ் தலைவர் கோவிட் -19  தொற்று முன்னதாக கண்டறிய, அதிக அளவில்  சி.டி ஸ்கேன்களுக்கு செய்வது, ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்தார்.

பல முறை சி.டி ஸ்கேன் எடுக்கும் போது பக்க விளைவுகள் அதிகம் இருப்பதாகவும்,  தீங்கு விளைவிக்கும்  ஆபத்து அதிகம் என்றும் டாக்டர் குலேரியா கூறினார்.

லேசான COVID தொற்று இருக்கும் போது  CT ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று எய்ம்ஸ் இயக்குனர் வலியுறுத்தினார்.

கடந்த வாரம், சுகாதார அமைச்சகம் லேசான மற்றும் அறிகுறியற்ற கோவிட் -19  தொற்று நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தும் விதிகளை திருத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ்  உள்ள தொற்று நோயாளிகள் அறிகுறிகள் தோன்றியதிலிருந்து குறைந்தது 10 நாட்கள் க்டந்த நிலையி, அடுத்த 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால், தனிமைபடுத்தப்படும் காலத்தை முடித்துக் கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் கூறியது.

ALSO READ | மத்திய அரசிடம் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கிறது: SII அதார் பூனவல்லா
 

Read More | https://zeenews.india.com/tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *