சென்னை: திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி தாலுகா, ராமநாதபுரத்தில் உள்ள மேட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில், ஒருவரிடம் சங்க செயலாளர் சுப்பிரமணியம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அவர் தாக்கல் செய்த மனுவை திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட மறு ஆய்வு மனுவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதிகள் சத்தியநாராயணன், செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முழு அமர்வு விசாரித்து, தனியார் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்களையே அரசு ஊழியர்களாக கருத முடியாது என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்களாகவே கருதப்படுவர் என கூறி, மனுவை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.